குளத்துபுலி அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா


குளத்துபுலி அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 7 April 2023 6:45 PM GMT)

சிவல்விளைபுதூர் குளத்துபுலி அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி சிவல்விளைபுதூர் குளத்துபுலி அய்யனார் கோவில் பங்குனி உத்திர திருவிழா 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 11 மணி, நண்பகல் 12 மணி, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரி நடந்தது. மறுநாள் 12 மணிக்கு சிறப்பு பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜை நடந்தது. நேற்று 7-ந்தேதி காலை 9 மணிக்கு திருவிழா நிறைவு பூஜையுடன் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story