குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒத்தி வைப்பு


குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒத்தி வைப்பு
x

போதிய உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாததால் குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

கரூர்

ஒன்றியக்குழு கூட்டம்

குளித்தலை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் நியமனக்குழு, வேளாண்மை உற்பத்திக்குழு, கல்விக்குழு, பொதுநோக்கக்குழு அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தீர்மானம் வாசித்து முடிந்த பிறகு எழுந்த தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தை ஒத்தி வைக்கும்படி கூறிவிட்டு வெளியேறினர்.

தி.மு.க.வினர் வெளிநடப்பு

பின்னர் வெளியே வந்த தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறுகையில், தற்பொழுது ஒன்றியக்குழுவில் தி.மு.க. உறுப்பினர்கள் 7 பேர் உள்ளனர். தலைவர், துணைத்தலைவர், ஒரு ஒன்றிய குழு உறுப்பினர் என அ.தி.மு.க.வில் 3 பேர் மட்டுமே உள்ளனர். அ.தி.மு.க.வை காட்டிலும் தி.மு.க. உறுப்பினர்கள் அதிக பெரும்பான்மையில் உள்ளோம்.

அப்படி இருக்கும் சமயத்தில் தற்போது ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் கூறப்படும் நியமனக்குழு உள்ளிட்ட குழுக்களில் அ.தி.மு.க.வை சேர்ந்த தலைவர், துணைத்தலைவர் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் வருவதை ஏற்க முடியாது. எனவே கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்று கூறிய வெளியேறியதாக தெரிவித்தனர்.

கூட்டம் ஒத்திவைப்பு

இந்தநிலையில் போதிய உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாத காரணத்தினால் கூட்டத்தை ஒத்தி வைப்பதாக ஒன்றிய குழு தலைவர் விஜயவிநாயகம் அறிவித்தார்.

கடந்த மாதம் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் 7 தி.மு.க. உறுப்பினர்களும் கலந்து கொள்ளாத காரணத்தினால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story