குமரிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது


குமரிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது
x

தஞ்ைசயில் இருந்து குமரிக்கு 1,250 டன் ரேஷன் அரிசி வந்தது

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பச்சரிசி, புழுங்கல் அரிசி, கோதுமை, சீனி, பாமாயில், துவரம் பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த பொருட்கள் மத்திய, மாநில அரசுகளின் ஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் ஒதுக்கீட்டின்படி அனுப்பி வைக்கப்படும் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சீனி, கோதுமை போன்ற பொருட்கள் நாகர்கோவிலில் உள்ள மத்திய உணவு பாதுகாப்பு குடோனிலும், மாநில அரசின் ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்படும் பொருட்கள் நாகர்கோவில் கோணம் உள்ளிட்ட 6 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்களிலும் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்தநிலையில் தஞ்சையில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 1,250 டன் ரேஷன் புழுங்கல் அரிசி குமரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த புழுங்கல் அரிசி நேற்று காலை நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அவை லாரிகள் மூலம் கோணம், ஆரல்வாய்மொழி, காப்பிக்காடு உள்ளிட்ட 6 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


Next Story