குமரி: வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி விஷாக திருவிழா கொடியேற்ற...!


குமரி: வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி விஷாக திருவிழா கொடியேற்ற...!
x

வேளிமலை முருகன் கோவிலில் வைகாசி விஷாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

கன்னியாகுமரி


குமரி மாவட்டத்தில் பிரசிதிபெற்ற குமாரகோவில், வேளிமலை முருகன் கோவில் வைகாசி விஷாக திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின் கோவில் கொடிமரத்தில் கோவில் மேல்சாந்தி கொடியேற்றினார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்கள். விழாவின் எட்டாம் நாள் (ஜூன் - 10) ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வெளியே வரும் சண்முகநாதர் பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

வரும் 11-ம் தேதி காலை 8.30 மணிக்கு தோரோட்டமும், 12-ம் தேதி காலை 10 மணிக்கு சுவாமிகளுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மூலஸ்தானத்தில் இருக்கும் ஸ்ரீவேளி சுவாமி ஆறாட்டிற்காக எழுந்தருளுகிறார்.அன்றையதினம் காலை 9 மணிக்கு இடுப்பன் சேனை முப்பத்தாறு ஊர் காவடி கமிட்டி சார்பில் முப்பத்தாறு ஊர்கள் பங்குகொள்ளும் பால் குட பவனி தக்கலை பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டு குமாரகோவிலுக்கு செல்கிறது.


Next Story