குமரி மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பட்டியல்;மாவட்ட செயலாளர்களாக அமைச்சர் மனோ தங்கராஜ்- மேயர் மகேஷ் தேர்வு


குமரி மேற்கு, கிழக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பட்டியல்;மாவட்ட செயலாளர்களாக அமைச்சர் மனோ தங்கராஜ்-  மேயர் மகேஷ் தேர்வு
x

தி.மு.க. 15-வது பொதுத்தேர்தலில் குமரி மேற்கு மற்றும் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜூம், கிழக்கு மாவட்ட செயலாளராக மேயர் மகேசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

தி.மு.க. 15-வது பொதுத்தேர்தலில் குமரி மேற்கு மற்றும் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியலை தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது. மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் மனோ தங்கராஜூம், கிழக்கு மாவட்ட செயலாளராக மேயர் மகேசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிர்வாகிகள் விவரம் வெளியீடு

தி.மு.க. 15-வது பொதுத்தேர்தல் முடிவுகளை தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், மாநகர் மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, மாவட்ட நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வெளியிடப்பட்டுள்ள குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் விவரம் வருமாறு:-

அமைச்சர் மனோ தங்கராஜ்

அவைத்தலைவர்- மரிய சிசுகுமார், செயலாளர்- அமைச்சர் மனோ தங்கராஜ், துணைச் செயலாளர்கள்- ராஜ், அப்புகுட்டன், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், பொருளாளர் ததேயு பிரேம்குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்- ரிமோன், பப்புசன், டேவிட் ராஜபோஸ்,

பொதுக்குழு உறுப்பினர்கள்- மணி, தனிஸ்லாஸ், அலாவுதீன், திலிப்குமார், மனோமணி, கோமதி, கிறிஸ்டல் பிரேமகுமாரி, ஒன்றிய செயலாளர்கள்- அருளானந்தராஜ் (தக்கலை வடக்கு), ஜான்சன் (திருவட்டார் வடக்கு), ஜான்பிரைட் (திருவட்டார் தெற்கு), புஷ்பா தங்கராஜன் (கிள்ளியூர் வடக்கு), கோபாலகிருஷ்ணன் (கிள்ளியூர் தெற்கு), சையினி கார்ட்டன் (மேல்புறம் வடக்கு), ராஜேஷ்குமார் (மேல்புறம் தெற்கு), மோகனன் (முன்சிறை கிழக்கு), ராபி (முன்சிறை மேற்கு), நகர செயலாளர்கள்- ரயிஸ் சுபிஹான் (பத்மநாபபுரம்), வினுகுமார் (குழித்துறை), ரமேஷ் (கொல்லங்கோடு).

பேரூர் செயலாளர்கள்

பேரூர் செயலாளர்கள்- பிரைட்சிங் (விலவூர்), ஷாஜி (குமாரபுரம்), டட்லி வில்பர்சார்ஸ் (கோதநல்லூர்), செய்யது அலிகான் (திருவிதாங்கோடு), ஜான்பெனேசர் (திற்பரப்பு), சேம் பெனட்சதீஸ் (பொன்மனை), ஜெபித்ஜாஸ் (குலசேகரம்), சோழராஜன் (ஆற்றூர்), செல்வகுமார் (வேர்க்கிளம்பி), சுந்தர்ராஜ் (திருவட்டார்), அருள்ராஜ் (கருங்கல்), ரெகு (நல்லூர்), ஆனந்தராஜ் (உண்ணாமலைக்கடை), சத்யராஜ் (கிள்ளியூர்), ஜூலியஸ் மனோஜ் (பாலப்பள்ளம்), முகம்மதுகான் (கீழ்குளம்), ஜெயக்குமார் (இடைக்கோடு), அருள்ராஜ் (பளுகல்), ஷிபு (கடையல்), பபின்லால் (களியக்காவிளை), ஜெகன்ராஜ் (அருமனை), ராபின்சன்பாபு (பாகோடு), சார்லஸ் (புதுக்கடை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேயர் மகேஷ்

குமரிகிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர்- ராஜரத்தினம், செயலாளர்- மேயர் மகேஷ், துணைச் செயலாளர்கள்- பூதலிங்கம், சோமு, கரோலின் ஆலிவர்தாஸ், பொருளாளர்- கேட்சன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள்- சதாசிவன், பார்த்தசாரதி, தாமரைபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள்- ஜோசப்ராஜ், காதர்ரகுமான், ஜீவானந்தம், எல்டபோன்ஸ், ஜான்லீபன், ஞானபாய்,

ஒன்றிய செயலாளர்கள்- மதியழகன் (அகஸ்தீஸ்வரம் வடக்கு), பாபு (அகஸ்தீஸ்வரம் தெற்கு), பிராங்கிளின் (தோவாளை வடக்கு), செல்வன் (தோவாளை கிழக்கு), சற்குருகண்ணன் (ராஜாக்கமங்கலம் வடக்கு), லிவிங்ஸ்டன் (ராஜாக்கமங்கலம் தெற்கு), சுரேந்திரகுமார் (குருந்தங்கோடு கிழக்கு), சத்தியபால் சந்திரா என்ற பி.எஸ்.பி. சந்திரா (குருந்தங்கோடு மேற்கு), ரமேஷ்பாபு (தக்கலை தெற்கு), நகர செயலாளர்- நாகூர்கான் (குளச்சல்), பேரூர் செயலாளர்கள்- பாபுராஜ் (திங்கள்நகர்), ரெங்கராஜா (வெள்ளிமலை), இளங்கோ (அஞ்சுகிராமம்), அய்யப்பன் (அழகப்பபுரம்), சுதாகர் (மயிலாடி), மகேஷ் (மருங்கூர்), முத்து (தேரூர்), சுந்தர் (சுசீந்திரம்), வைகுண்டபெருமாள் (கொட்டாரம்), பூவியூர் காமராஜ் (தென்தாமரைக்குளம்), பாபு (அகஸ்தீஸ்வரம்), குமரி ஸ்டீபன் (கன்னியாகுமரி), சிவகுமார் (தாழக்குடி), ஆலிவர்தாஸ் (பூதப்பாண்டி), சுப்பிரமணியன் (ஆரல்வாய்மொழி), அருள்தாஸ் (அழகியபாண்டியபுரம்), பிரபா எழில் (கணபதிபுரம்), பிரதாப்சிங் (புத்தளம்), ராபர்ட் கிளாரன்ஸ் (மண்டைக்காடு), அய்யப்பன் (மணவாளக்குறிச்சி), செல்வதாஸ் (நெய்யூர்), சகாய கிறிஸ்துதாஸ் (வில்லுக்குறி), சுஜெய் ஜாக்சன் (ரீத்தாபுரம்), ரஜிலின் ராஜகுமார் (கல்லுக்கூட்டம்), எட்வின் (முளகுமூடு), காட்வின் (கப்பியறை), சுரேஸ் (வாழ்வச்சகோஷ்டம்), சுப்பிரமணியம் (இரணியல்).

நாகர்கோவில் மாநகரம்

நாகர்கோவில் மாநகர அவைத்தலைவர்- பன்னீர்செல்வம், செயலாளர் - ஆனந்த், துணைச் செயலாளர்கள் ராஜன், வேல்முருகன், மேரி பிரின்சி லதா, பொருளாளர்- சுதாகர், பகுதி செயலாளர்கள்- துரை (கிழக்கு பகுதி), சேக்மீரான் (மேற்கு பகுதி), ஜவகர் (வடக்கு பகுதி), ஜீவா (தெற்கு பகுதி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.


Next Story