நெகமம் அருகே மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
நெகமம் அருகே மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நெகமம்
நெகமம் அருகே மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழா
நெகமம் அருகே ரங்கம்புதூரில் பழமையான மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் ஆனது. இந்தநிலையில் கோவிலில் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் செய்து, வர்ணம் பூசப்பட்டது. பின்னர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி மாகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று முன்தினம் மங்கள இசை, விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், கிராம சாந்தி, வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், கோ பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை, அங்குரார்ப்பணம், காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், இறைசக்திகளை திருக்குடங்களில் எழுந்தருளச் செய்து கோவிலை சுற்றி வந்து யாகசாலை அடைந்து முதற்கால யாகவேள்விகள், விசேஷ அர்ச்சனை, மூலமந்திர ஹோமங்கள், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவீதி உலா
நேற்று அதிகாலை 5 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜைகள், விநாயகர் பூஜை, திருமுறை பாராயணம், வேத பாராயணம், மூலமந்திரம் ஓதி, மூல மந்திர ஹோமங்கள் நடத்தி கலசங்கள் கோவிலை சுற்றி வலம் வந்தது. தொடர்ந்து மாகாளியம்மன் விமான கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. மேலும் மாகாளியம்மன், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அபிஷேகம், அலங்காரம், நெய்வேத்தியம், திருக்கல்யாணம் நடைபெற்றுதீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் முக்கிய வீதிகள் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.