அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கானங்காடு அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கானாங்காட்டில் புதிதாக அம்மச்சார் அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மங்கல இசையுடன் கோ பூஜை, யாகசாலை பூஜை ஆரம்பமானது. காலை 9 மணிக்கு யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் புறப்பாடு நடைபெற்று கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கானங்காடு மற்றும் சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story