ஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்


ஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம்
x

ஆண்கள் மட்டும் வழிபடும் அஞ்சலான்குட்டை முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சேலம்

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கொட்டிப்பள்ளம் நீரோடை அருகே சிங்கிபுரம் ஊராட்சி பழனியாபுரம் காலனி எல்லை வனப்பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான அஞ்லான்குட்டை முனியப்பன் கோவில் உள்ளது. கற்சிலையான மூலவர் மட்டும் அல்லாமல் சடாமுனி, வால்முனி, செம்முனி ஆகிய ராட்சத உருவம் கொண்ட 3 முனியப்பன் சிலைகளும் கோவில் வளாகத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. இந்த கோவிலுக்கு பெண்கள் செல்ல அனுமதிப்பதில்லை. கோவிலில் ஆண்களே பொங்கலிட்டு, ஆட்டுக்கிடா, கோழி பலியிட்டு, கறி சமைத்து சாமிக்கு படையல் வைத்து வழிபடும் வினோதம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை, அபிஷேக ஆராதனைகளுக்கு பிறகு முனியப்பனுக்கு மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டது. சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story