திருக்கோவிலூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்; நாளை நடக்கிறது


திருக்கோவிலூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்;   நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 25 Oct 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூர் பாலசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள பிரசித்திபெற்ற வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக நேற்று காலை விக்னேஸ்வரபூஜை, ஸ்ரீமகாகணபதி ஹோமம் மற்றும் தீபாராதனையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து பிரவேச பலி, வாஸ்து சாந்தி, கும்பஅலங்காரம் மற்றும் முதல் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, யாக வேள்வி மற்றும் மாலையில் 3-ம் கால யாக சாலை பூஜைகளும் நடக்கிறது.

கும்பாபிஷேக நாளான நாளை காலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடக்கிறது. 8.45 மணிக்கு ஸ்தூபி விமான கும்பாபிஷேகமும், காலை 9.30 மணிக்கு மேல் 10 மணிக்குள் மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும், தீபாராதனையும் வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது. மேலும் கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. அதன்பிறகு மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு சாமி வீதி உலா காட்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர்கள், உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களும், முருக பக்தர்களும் முன்நின்று செய்து வருகின்றனர்.


Next Story