குளுந்தாளம்மன் கோவில் கும்பாபிஷேகம்


குளுந்தாளம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

குளுந்தாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

திருச்சி

லால்குடி:

லால்குடியை அடுத்த நகர் கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு குளுந்தாளம்மன், வெள்ளந்தாங்கி அம்மன், பின்னமரத்தான், மதுரை வீரன், அய்யனார், சாவடி பிள்ளையார் கோவில் புதுப்பிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நேற்று காலை 4-ம் காலை யாக பூஜை செய்யப்பட்டு, பின்னர் பூர்ணாஹுதி மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சாவடி விநாயகர், அய்யனார் சன்னதிகள் மற்றும் குளுந்தாளம்மன் விமானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் மூலவர், பின்ன மரத்தான், வெள்ளந்தாங்கி அம்மன், மதுரை வீரன் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில நிர்வாகி தர்மராஜ், கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தாபாபு, முத்தையா மற்றும் மதியழகன், கிருஷ்ணமூர்த்தி, சுபாபதி, செட்டியப்பன், ராஜ்குமார், பாலன், பரமேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story