கருமேனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
பரமக்குடி அருகே கருமேனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே கருமேனி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம்
பரமக்குடி தாலுகா என்.வளையனேந்தல் கிராமத்தில் சப்த கன்னி ரூப கருமேனி அம்மன் கோவில் முற்றிலும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. மூன்று நிலை கோபுரத்துடன் கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. அந்தக் கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. அதையொட்டி தினமும் காலை, மாலை யாக சாலை பூஜைகள் நடந்தன.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் குடங்களை தலையில் சுமந்து கோவிலை வலம் வந்தனர். 10.25 மணிக்கு விநாயகர், வள்ளி-தெய்வானை-சுப்பிரமணியர், கருப்பணசுவாமி சிலைகள் உள்பட சப்த கன்னி ரூப கருமேனி அம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றினர். பின்பு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரமும் தீபாராதனையும் நடைபெற்றது. பூசாரிகள் லாடையா, லாடசெல்வம், கோடாங்கி அஜீத் ஆகியோர் சுவாமிக்கு பூஜை நடத்தி பிரசாதம் வழங்கினர்.
அன்னதானம்
கும்பாபிஷேகத்திற்கு பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கிராமத் தலைவர் கருப்பையா, என்.வளையனேந்தல் யாதவர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், கமிட்டி நிர்வாகத் தலைவர் கார்மேகம், நிர்வாக குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆலய வம்சாவழி குலதெய்வ குடிமக்கள், என். வளையனேந்தல் கிராம பொதுமக்களும் சிறப்பாக செய்திருந்தனர். கோவிலை அழகாக வடிவமைத்த சிற்பி பிரபாகரனை பாராட்டி பொன்னாடைகள் அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கே.ஜி. கருப்பையா, சந்திரசேகர், கேசவன், குணா மற்றும் என். வளையனேந்தல் கிராம பொதுமக்கள், சுற்றுப்புற கிராம மக்கள், முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.