காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்


காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
x

காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே சித்திரவிடங்கம் விநாயகர் மகாலிங்க மூர்த்தி, முனீஸ்வரர், பாலமுருகன், விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையடுத்து யாக சாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 3 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் யாக சாலையில் புனிதநீர் கலசங்களில் நிரப்பி வைத்து பூஜிக்கப்பட்டது. இதையடுத்து கலசங்களை தலையில் சுமந்து சிவாச்சாரியார்கள் மேள தாளம் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோவில் மூலஸ்தான விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரிமளம் அருகே கீரணிபட்டியில் பூமி நீலா சமேத திருமால், சின்னக் கருப்பர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 3 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சிவாச்சாரியார்கள் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story