மணகாவல பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


மணகாவல பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:45 PM GMT)

கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரம் மணகாவல பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே திருமலையப்பபுரத்தில் மணகாவல பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணகாவல பெருமாள் சீதா லட்சுமண ராமச்சந்திரமூர்த்தி சமேத ஆஞ்சநேயர் சுவாமி சன்னதிக்கு புதிய விமானம், கல் மண்டபம், கல் கோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 29-ந்தேதி முதல் கால பூஜையுடன் விழா தொடங்கி பல்வேறு பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலை 6-ம் கால பூஜையை தொடர்ந்து கோபுரம், விமானம், சுவாமி-அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து ெகாண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story