முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

காரையூர் அருகே மேலத்தானியம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி யாக சாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை மேலத்தானியம், எட்டுப்பட்டி கிராமத்தார்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story