முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

வெட்டன்விடுதி அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை

கோவில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா வெட்டன்விடுதி அருகே தெற்கு வாண்டான் விடுதியில் சித்தி விநாயகர், முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் சக்தி வடிவானவர் அறுபத்து மூன்று சக்தி பீடங்களில் ஆட்சி செய்து தாயானவள் இக்கிராமத்தில் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி சொரூபத்தில் முத்துமாரி அம்மனாக எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தந்தருளிகிறார்.

கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து கோவிலில் கும்பாபிஷேகம் நாளை (வியாழக்கிழமை) காலை 9.05 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் நடைபெற உள்ளது. இதையொட்டி பூர்வாக பூஜைகள் நேற்று கோவிலில் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்றும் (புதன்கிழமை) காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெறும்.

சிறப்பு பூஜைகள்

மேலும் கோவிலில் அம்மன் மற்றும் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். கோபுர கலசங்களில் ஊற்றப்படும் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்படும். கும்பாபிஷேகத்தையொட்டி நாளை மதியம் அன்னதானம் நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு மேல் வண்ணமிகு வாணவேடிக்கையும், அதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி நிறுவன புகழ் மூக்குத்தி முருகன், வி.எம்.மகாலிங்கம் இணைந்து பங்கேற்கும் திண்டுக்கல் ஸ்ரீகுமரனின் நண்பர்கள் இசைக்குழுவின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை வெட்டன்விடுதியை சேர்ந்த தெற்கு வாண்டான்விடுதி, கச்சத்தான் புஞ்சை, மின்னம்புஞ்சை அனைத்து கரைக்காரர்கள் மற்றும் சுற்றுவட்டார ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.


Next Story