டி.பெருமாபாளையம் சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்


டி.பெருமாபாளையம் சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 6 July 2023 1:42 AM IST (Updated: 6 July 2023 5:44 PM IST)
t-max-icont-min-icon

டி.பெருமாபாளையம் சாய்பாபா கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

சேலம்

சூரமங்கலம்

சேலம் மாவட்டம் டி.பெருமாபாளையம் கொம்பேரிகாடு வராகி அம்மன் கோவில் வளாகத்தில் புதிதாக சாய்பாபா கோவில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த 2 நாட்களாக முதல் கால மற்றும் நீண்ட கால பூஜைகள் நடந்து வந்தன. இதற்காக யாகசாலைகள் அமைக்கப்பட்டு புனித தீர்த்தங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு வேத விற்பனர்கள் வேத மந்திரங்களையும் முழங்க யாகசாலைகள் பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து 3-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியர்கள் எடுத்து வந்தனர். கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு சாய்பாபா கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் நரசுஸ் காபி நிறுவன தலைவர் சிவானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழா ஏற்பாடுகளை தண்டபாணி சுவாமி தலைமையில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story