வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

புதுக்கோட்டையில் வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கீழ 4-ம் வீதியில் ராஜாகுளம் மேற்கரையில் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் அருகே அமைந்துள்ள வாராஹி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவில் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் கோபுர கலசங்களுக்கும், அம்மனின் விமான கோபுரத்திற்கும் வேத மந்திரங்கள் ஓத புனித நீர் ஊற்றப்பட்டன. மேலும் அந்த புனித நீர் பக்தர்கள் மீதும் தெளிக்கப்பட்டன. கோவிலில் பரிவார தெய்வங்களின் கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டன. தொடர்ந்து கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story