விநாயகர், பட்டவன் சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம்
விநாயகர், பட்டவன் சுவாமி கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆவுடையார்கோவில்:
ஆவுடையார்கோவில் அருகே காரவயல் கிராமத்தில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி 3 கால யாக சாலை பூைஜகள் நடைபெற்றன. இதையடுத்து யாகசாலையில் கலசங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் விநாயகர் கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
இதேபோல் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி கிராமத்தில் பட்டவன் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் பட்டவன் சுவாமி கோவில் மூலஸ்தான விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
அறந்தாங்கி திருவள்ளுவர் தெருவில் சிங்கார சித்திவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாக சாலை பூைஜகள் நடைபெற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டியில் மலையப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சூலக்காட்டு மாரியம்மன், கருப்பர் உள்ளிட்ட பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகங்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.