கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கொப்புடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 4-ந்தேதி நடைபெறுகிறது.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடியில் காவல் தெய்வமாக கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவு பெற்ற நிலையில் வரும் 4-ந் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. முன்னதாக 30-ந் தேதி மாலை 6 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. மறுநாள் காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. 1-ந் தேதி மாலை முதற்கால யாக பூஜை பூர்ணாகுதி, 2-ந் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை 3-வது கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனைகளுடன் விழா நடக்கிறது.

3-ந் தேதி காலையில் 4-வது காலயாக பூஜைகள், பூர்ணாகுதி மற்றும் தீபாரதனையும், மாலையில் 5-வது கால யாகபூஜை, பூர்ணாகுதி, தீபாரதனை நிகழ்ச்சியும் நடக்கிறது. 4-ந் தேதி காலை 6-வது கால யாகபூஜை மற்றும் பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 9.15 மணிக்கு கடம்புறப்பாடு, காலை 9.30 மணி முதல் 10.15 மணிக்குள் கோவில் கோபுரங்களின் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்பாள் புறப்பாடு திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் இந்து சமய அறநிலையத்துறை தக்கார் மற்றும் உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி ஆகியோர் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story