3 கோவில்களில் கும்பாபிஷேகம்


3 கோவில்களில் கும்பாபிஷேகம்
x

மாவட்டத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

தாயில்பட்டி

மாவட்டத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏழாயிரம்பண்ணை

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரகோட்டை ஊராட்சி மார்க்கநாதபுரத்தில் முப்பிடாதி அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக நவக்கிரக ஹோமம், யாக சாலை பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விரதம் இருந்து காப்பு அணிந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாளையம்பட்டி

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி புளியம்பட்டி நெசவாளர் காலனியில் கங்கை முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இலுப்பைகுளம்

காரியாபட்டி அருகே இலுப்பைகுளம் ஸ்ரீ சோனையா முத்தையா சுவாமி கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக முதலாம் கால யாகசாலை, 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து 4-ம் கால சாலை பூஜை முடிந்தவுடன் புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

அதேபோல பரிவார தேவதைகளான நரசிங்கபெருமாள், முத்தையா சுவாமி, அழகுநாச்சி அம்மன், அய்யன் கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story