கொங்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மீஞ்சூர் அடுத்த காட்டூர் கிராமத்தில் கொங்கியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
மீஞ்சூர் அடுத்த காட்டூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கொங்கியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவில்கள் உள்ளது. இந்த கோவில்கள் புனரமைப்பு பணி நடந்து முடிந்த நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை விநாயகர் பூஜையுடன் கணபதி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி போன்றவை நடந்தது. கும்பாபிஷேக விழாவில் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ. டிஜே.கோவிந்தராஜன், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராமன், மீஞ்சூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜெகதீசன், வார்டு உறுப்பினர் மூர்த்தி, ஜெய்கணேஷ், முனியம்மாள், சங்கர், ஒன்றிய கவுன்சிலர் நந்தினி, கிராம பொதுநல சங்கத்தை சேர்ந்த பார்த்திபன், தர்மலிங்கம், பக்தவச்சலம், கந்தசாமி முருகன், பிரபா, ஆதிதிராவிட மகா ஜனசங்கத்தை சேர்ந்த ரமேஷ், பாலமுருகன், ராமச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொங்கியம்மன் மற்றும் செல்லியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.