தமிழகத்தில் 157 கோவில்களில் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்


தமிழகத்தில் 157 கோவில்களில் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

தமிழகத்தில் 157 கோவில்களில் கும்பாபிஷேகம் அமைச்சர் சேகர்பாபு தகவல்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான கோவில்களை பழமை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த அறிவுரை வழங்கி உள்ளார்.

மாநில அளவிலான வல்லுநர் குழு கடந்த ஓராண்டில் பல கோவில்களுக்கு திருப்பணிகளை தொடங்க அனுமதி வழங்கி உள்ளது. அந்தவகையில் தஞ்சை 141, திருச்சி 137, நாகை 137, கடலூர் 131, திருப்பூர் 129, விழுப்புரம் 118, ஈரோடு 112, மயிலாடுதுறை 108, சென்னை மண்டலம் 2-ல் 103, தூத்துக்குடி 102, நெல்லை 92, சேலம் 91, வேலூர் 89, திருவண்ணாமலை 88, காஞ்சீபுரம் 85, சென்னை மண்டலம் 1-ல் 82, சிவகங்கை 81, கோவை 81, மதுரை 76, திண்டுக்கல் 59 ஆகிய மண்டலங்களில் 2 ஆயிரத்து 42 கோவில்களுக்கு மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகளை பரிசீலித்து ஆலோசனை மற்றும் ஒப்புதல் வழங்கப்பட்டு திருப்பணி வேலைகள் நடந்து வருகிறது.

இதில் 2 ஆயிரத்து 42 கோவில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு இதுவரை 157 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


Next Story