பிரம்மா சுவாமிக்கு கும்பாபிஷேகம்


பிரம்மா சுவாமிக்கு கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேல்மலையனூரில் பிரம்மா சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழுப்புரம்

மேல்மலையனூர்,

மேல்மலையனூரில் அமைந்துள்ள லட்சுமிநாராயண அஷ்டலட்சுமி சித்தர் சைவ பீடத்தில் புதிதாக பிரம்மா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அங்கு வாஸ்துசாந்தி, கணபதி பூஜை, கோ பூஜை, தனபூஜை, யாகசாலை பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று பிரம்மா சிலை மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் ஆதீனம் முனியம்மாள் சுவாமிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story