கோவில் கும்பாபிஷேக விழா


கோவில் கும்பாபிஷேக விழா
x

கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே கடம்போடை கிராமத்தில் பழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சிவாச்சாரியார்கள், வேதமந்திரங்கள், இசை வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு சென்று விமான கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. சாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், விபூதி உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் கடம்போடை, பூசேரி, தேரிருவேலி, முதுகுளத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். கிராம கும்பாபிஷேக விழா நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story