ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர்
திருப்பூர் வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேக விழா நடத்த கோவில் கமிட்டி முடிவு செய்தது. இதன்படி கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 18-ந்தேதி காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கோவிலில் தினமும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபிஷேக விழா நேற்று அதிகாலை 4-ம் கால பூஜையுடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா தேவாங்கர்குல ஜெகத்குரு தயானந்தபுரி மகா சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி தயானந்தபுரி மஹா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் கமிட்டி, விழா கமிட்டி, இளைஞரணி, மகளிரணி மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
------------------