திருப்பூர் நல்லூரில் உள்ள விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
திருப்பூர் நல்லூரில் உள்ள விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
நல்லூர்
திருப்பூர் நல்லூரில் உள்ள விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரசாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
விஸ்வேஸ்வரசாமி கோவில்
திருப்பூர் நல்லூரில் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலைகள் அமைக்க பட்டு 4 கால பூஜைகள் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
நேற்று காலை காலை 4 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், நான்காம் கால பூஜை, திரவ்யாஹீதி, பூர்ணாஹீதி, தீபாராதனை நடைபெற்றது. பினனர் காலை 5.40 மணிக்கு கலசங்களை சிவாச்சாரியார்கள் சுமந்து கொண்டு விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில் விமானம் மற்றும் ராஜகோபுரம் மற்றும் மூலாலயத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் தீர்த்தங்களை சிவாச்சாரியார்கள், கோவில் பணியாளர்கள் பக்தர்களுக்கு தெளித்தனர். அதன்பின்னர் 6 மணி அளவில் ஈஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பக்தர்கள் சாமிதரினம்
கும்பாபிஷேகத்தினை பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் மற்றும் தியாகராஜ, கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்திவைத்தனர். கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்கள், ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷத்துடன் சாமி தரினம் செய்தனனர். கும்பாபிஷேகத்தின் போது சிவனடியார் குழுவின் சார்பில் மேளதாளங்கள் முழங்க நடனம் ஆடினர். விதவிதமான வானவேடிக்கை நடைபெற்றது. கோவில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் பக்தர்களுக்கு சக்கரை பொங்கல், வடை, பாயாசத்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 4.30 மணியளவில் மகா அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டு திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூர்த்திகள், திருவீதி உலா அழைத்து வந்து தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு மண்டல அபிஷேகம் தொடங்கி மதியம் 12 மணி அளவில் மகா தீபாராதனை பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநகர போலீசார் பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பி சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.