குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோவில் பால்குட திருவிழா
கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே குமிளங்காடு கிராமத்தில் ஆதிநாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதம் நாக சதுர்த்தி அன்று பால் குட திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் சுமந்து வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டும் பால்குட திருவிழா வெகுவிமர்சையாக நேற்று மாலை நடந்தது. விழாவை முன்னிட்டு முதல் நாளிலிருந்து பத்தாம் நாள் வரை காப்பு கட்டிக் கொண்ட பக்தர்கள் 100-க்கும் மேற்பட்டோர் பால்குடம் மற்றும் அலகு காவடிகள் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக நாகாத்தம்மன் கோவிலுக்கு வந்து அடைந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு நாகாத்தம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு திபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோவில் அறங்காவலர் தெய்வேந்தஅடிகளார் மற்றும் விழா குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.