சுற்றுலா தினத்தையொட்டி கும்மியாட்ட நிகழ்ச்சி


சுற்றுலா தினத்தையொட்டி  கும்மியாட்ட நிகழ்ச்சி
x
திருப்பூர்


உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நேற்று உடுமலை குட்டை திடலில் கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கலைக்குழுவினர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், மாவட்ட துணை சுற்றுலா அதிகாரி ஆனந்தன் தொடக்கி வைத்தனர்.இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல்களுக்கு ஏற்றவாறு ஆடினார்கள்.இந்த நிகழ்வை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.இதில் உடுமலை தாசில்தார்சுந்தரம்,போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன், நாகராஜ், சத்யம் பாபு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதே போன்று சுற்றுலா தினத்தை முன்னிட்டு உடுமலை அமராவதி அணைப் பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வுக்கு உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து தன்னார்வலர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.


Next Story