கும்மியாட்டம் ஆடி அசத்திய பெண்கள்


கும்மியாட்டம் ஆடி அசத்திய பெண்கள்
x
தினத்தந்தி 30 Jun 2023 1:30 AM IST (Updated: 30 Jun 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே கோவில் விழாவில் பெண்கள் கும்மியாட்டம் ஆடினர்.

திண்டுக்கல்

பழனி அருகே அமரபூண்டி கிராமத்தில் அண்ணன்மார் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 28-ந்தேதி கணபதி பூஜை, முதற்கால யாக பூஜை நடந்தது. நேற்று 2-ம் கால, 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பாரம்பரிய ஆட்டமான வள்ளி கும்மி ஆட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்-சிறுமிகள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பச்சை நிறத்திலான சேலை, பாவாடை-சட்டை அணிந்து பெண்கள், சிறுமிகள் கும்மியாட்டம் ஆடி அசத்தினர். இதேபோல் ஒரே மாதிரியான வேட்டி-சட்டை அணிந்து ஆண்கள் கும்மியாட்டம் ஆடினர். ஆட்டத்தின்போது முருகப்பெருமானின் புகழ் பாடி, மேளதாளத்துக்கு ஏற்ப ஆடியது அங்கிருந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.


Related Tags :
Next Story