2 வாலிபர்கள்குண்டர் சட்டத்தில் கைது


2 வாலிபர்கள்குண்டர் சட்டத்தில் கைது
x
திருப்பூர்


திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட எஸ்.ஆர்.நகர் தெற்கு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 31-ந்தேதி சிபிகார்த்திக் என்பவரை அரிவாளால் கழுத்து, தலை மற்றும் கை பகுதிகளில் வெட்டி கொலை முயற்சி செய்த வழக்கில் அசோக்குமார் (வயது 19), மோகன்குமார் என்ற கபாலி (21) உள்ளிட்ட 2 பேர் மீது மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவர்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசோக்குமார், மோகன்குமார் என்ற கபாலி ஆகியோரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.


Next Story