குந்தவை நாச்சியார் சிலை


குந்தவை நாச்சியார் சிலை
x

போளூர் அருகே குந்தவை நாச்சியார் சிலையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

திருவண்ணாமலை

போளூர்

போளூர் அருகே உள்ள திருமலை கிராமத்தில் அமைந்துள்ள ஜெயின் மடத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனின் சகோதரியும் சோழகுலத்தின் இளவரசியுமான குந்தவை நாச்சியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழா நடந்தது. தவளகீர்த்தி பட்டாரக சுவாமிஜி தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு குந்தவை நாச்சியார் சிலையை திறந்து வைத்தார்.

அப்போது அவர் ேபசுகையில், சமண மதத்தை சேர்ந்தவர்கள் உயிர்களிடத்தில் அன்பு, கருணை காட்டுவதில் சிறந்தவர்கள். எந்த உயிருக்கும் தீங்கு விளைவிக்காதவர்கள். சாதி, மொழி, இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள். சமண மதத்தை சேர்ந்தவர்களுக்கு திராவிட அரசு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருக்கும் என்றார்.

முடிவில் ஆர்.ராஜசேகர் நன்றி கூறினார்.


Next Story