குன்றக்குடி அரசு வேளாண் அறிவியல் நிலையத்துக்கு 5 விருதுகள்


குன்றக்குடி அரசு வேளாண் அறிவியல் நிலையத்துக்கு 5 விருதுகள்
x
தினத்தந்தி 22 Aug 2023 12:15 AM IST (Updated: 22 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

குன்றக்குடி அரசு வேளாண் அறிவியல் நிலையத்துக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

சிவகங்கை

காரைக்குடி

குன்றக்குடி அரசு வேளாண் அறிவியல் நிலையத்துக்கு 5 விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

ஆய்வு கருத்தரங்கம்

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 10-வது மண்டலத்தில் ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 72 வேளாண் அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் இந்த வேளாண் அறிவியல் நிலையங்களின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தொடர்பான பணி சார்ந்த செயல்பாடுகள் குறித்த ஆய்வு கருத்தரங்கம் 3 முதல் 4 நாட்கள் வரை இங்கு நடைபெறுவது வழக்கம்.

இதையடுத்து இந்த ஆண்டு வேளாண் அறிவியல் நிலையங்களின் செயல்பாடுகளுக்கான வருடாந்திர கருத்தரங்கம் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 17-ந்தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் சிறப்பாக பணியாற்றிய வேளாண் அறிவியல் நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

5 விருதுகள்

இதையடுத்து காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் கிராமப்புற இளைஞர்களை வேளாண்மையில் நிலைநிறுத்தியது. அதிகளவில் வேளாண் பயிற்சிகளை வழங்கியது. நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் கால்நடை விவசாயிகளை தொழில்முனைவோராக உருவாக்கியது, வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடுகளை காலம் தவறாமல் உரிய நேரத்தில் அறிக்கைகளாக அரசுக்கு சமர்ப்பித்தது உள்ளிட்ட காரணங்களுக்காக மொத்தம் 5 விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருதுகளை ஐதராபாத் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் 10-வது மண்டல இயக்குனர் சேக் மீரா, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் பெங்களூரு மண்டல தலைவர் வெங்கடசுப்பிரமணி ஆகியோர் குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்தூர்குமரனுக்கு வழங்கினர்.


Related Tags :
Next Story