சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்


சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
x
திருப்பூர்


குடிமங்கலத்தில் நீர் வழித்தடத்தில் ரோட்டோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.

குப்பைகள்

குடிமங்கலம் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குடிமங்கலத்தில் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், நூற்பாலைகள் அதிக அளவில் காணப்படுகிறது. பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் குடிமங்கலம் குளத்தின் அருகே குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. குப்பைகள் குளத்திற்கு செல்லும் நீர் வழித்தடத்தில் கொட்டப்படுகிறது. குப்பைகளுக்கு சிலர் தீ வைத்து விடுவதால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் மாநில நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றன. குப்பைகளை நீர் வழித்தடப்பகுதியில் ரோட்டோரம் கொட்டுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. குப்பைகளோடு, பாலித்தீன் கவர்களும் அதிக அளவில் காணப்படுகிறது. பாலித்தீன் கவர்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் கிராமப்புறங்களில் பாலித்தீன் பயன்பாடு உள்ளது.

சுகாதார சீர்கேடு

மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூல மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறு சுழற்சி செய்யும் முறை ஊராட்சிகளில் செயல்பாட்டில் இல்லை. இதனால் கிராமமக்கள் குப்பைகளை சாலையோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கொட்டி செல்கின்றனர்.

குப்பைகளை கொட்டுவதற்காக ஊராட்சிக்கு வழங்கப்பட்ட குப்பைத்தொட்டிகள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. குப்பைத் தொட்டியில் கொட்டப்பட வேண்டிய குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுகிறது. எனவே குப்பைகளை குடியிருப்பு பகுதிகளிலோ சாலையோரங்களில் கொட்டுபவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story