மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் குப்பை


மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் குப்பை
x
திருப்பூர்


திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் தினசரி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட், மளிகை கடைகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இங்கு கடைகளில் சேகரமாகும் குப்பைகள் சரிவர அப்புறப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் காய்கறி மார்க்கெட் அருகே கீரை மற்றும் காய்கறி கழிவுகள் மூட்டை, மூட்டையாக குவிந்து கிடக்கின்றன. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் வாகன போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இதேபோல் அங்குள்ள கழிவுநீர் கால்வாயை அடைத்தபடி குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன. இதனால் கழிவுநீர் பாய்ந்து செல்ல வழி இன்றி தேங்கி நிற்பதால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசு மற்றும் புழுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்தவும், வருங்காலங்களில் குப்பைகள் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வதற்கும் மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.


Next Story