சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பை
திருப்பூர் பல்லடம் ரோடு சந்தைப்பேட்டையில் இருந்து செக்குகாரர் தோட்டம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்பட்டுள்ளன. குறிப்பாக இங்கு காய்கறி கழிவுகள், மீன் மற்றும் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இங்கு எப்போதும் குப்பை நிரம்பி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. சிலர் மூட்டை, மூட்டையாக குப்பைகளை போட்டு செல்கின்றனர். சில நேரங்களில் சாலைகளிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன.
எனவே இங்கு குப்பைகள் தேங்குவதை தடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இப்பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டால் சாலையில் குப்பை கொட்டப்படுவது குறையும் எனவே தேவையான அளவிற்கு குப்பை தொட்டிகளை வைத்து முறையாக குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.