குப்பான் கண்மாய், தேனிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா


குப்பான் கண்மாய், தேனிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா
x

குப்பான் கண்மாய், தேனிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி ஒன்றியம் மைலாப்பூர் ஊராட்சியில் உள்ள குப்பான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் நேற்று அதிகாலை கண்மாய் முன்பு ஒன்று கூடினர். ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசிய பின்னர் குப்பான் கண்மாயில் இறங்கிய கிராம மக்கள் தூரி, கச்சா, வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி மீன்களை பிடிக்க தொடங்கினர். இதில் ஜிலேபி, கட்லா, கெண்டை, அயிரை உள்ளிட்ட மீன்களை ஏராளமானோர் பிடித்து சென்றனர்.

இதேபோல் பொன்னமராவதி ஒன்றியம் தேனிமலை அருகே உள்ள தேனிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.


Next Story