குப்பனூர் சாலை சீரமைப்பு பணி: ஏற்காட்டுக்கு கனரக வாகனங்கள் கோரிமேடு வழியாக செல்ல அனுமதி-நாளை முதல் அமல்


குப்பனூர் சாலை சீரமைப்பு பணி: ஏற்காட்டுக்கு கனரக வாகனங்கள் கோரிமேடு வழியாக செல்ல அனுமதி-நாளை முதல் அமல்
x

குப்பனூர் சாலை சீரமைப்பு பணி: ஏற்காட்டுக்கு கனரக வாகனங்கள் கோரிமேடு வழியாக நாளை முதல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம் அருகே குப்பனூர்- கொட்டச்சேடு- வாழவந்தி சாலையில் ஏற்கனவே சேதமடைந்த சிறுபாலம் மற்றும் தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையினரால் நடைபெற்று வருகிறது. இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்ய சேலம் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனால் சாலை பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 6-ந் தேதி வரை இருசக்கர வாகனங்கள் மட்டும் குப்பனூர்- கொட்டச்சேடு-வாழவந்தி வழியாக ஏற்காடு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் இதர கனரக வாகனங்கள் மாற்று வழியான கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் பிரதான சாலையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story