குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் ஆனிகொடை விழா கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது


குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் ஆனிகொடை விழா கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது
x

குரங்கனி முத்துமாலை அம்மன் கோவில் ஆனிகொடை விழா கால் நாட்டு நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனி கொடைவிழா நேற்று கால் நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் ெசய்தனர்.

குரங்கணி முத்துமாலை அம்மன்

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழாவை முன்னிட்டு நேற்று பகல் 1.30 மணி அளவில் குரங்கணி 60 பங்கு நாடுகளால் கால் நாட்டப்பட்டது.

முன்னதாக காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பகல் 12 மணி அளவில் விநாயகர், நாராயணர், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புஷ்ப அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பெரியசாமி கோவிலுக்கு மேல்புறம் உள்ள முப்பிடாதி அம்மன் சன்னதி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மரத்தாலான கால் ஊர் பெரியவர்கள் நாட்டப்பட்டது.

பக்தர்கள் குவிந்தனர்

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு தேங்காய் உடைத்து, மாலைகள் சாத்தி வழிபட்டனர். இன்று(புதன்கிழமை) முதல் பக்தர்கள் விரதம் தொடங்குகின்றனர். ஜூலை 12-ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான கொடை விழா விமரிசையாக நடைபெறும்.

இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் குவிந்து அம்மனை வழிபடுவர். அன்று பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தியும் வழிபாடு நடத்துவர்.


Next Story