உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி கோலாகலம்..!


உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி கோலாகலம்..!
x

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி கோலாகலமாக நடைபெற்றது.

நாகை,

ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் தவக் காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந்தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. தவக்காலத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை "குருத்து ஞாயிறு" நாளாக கடைப் பிடிக்கப்படும்.

அதன்படி நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று குருத்தோலை ஞாயிறு பவனி திருவிழா தொடங்கியது. பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு கீர்த்தனைபாடலை பாடி பங்கேற்றனர்.

பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.

சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் ஜெருச லேம் நகரில் இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதையில் ஏற்றி ஒலிவ மரக்கிளைகளை கைகளில் ஏந்தி சிறுவர், சிறுமியரும் பெரியோர்களும் பவனியாக தாவீதின் மகனுக்கு ஓசன்னா ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்" என்று ஆர்ப்பரித்து வந்தனர். இதையும் படியுங்கள்: உறையூரில் நம்பெருமாள்-கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை இன்று நடக்கிறது அந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், குருத்தோலை பவனி நடத்தப்படுகிறது.


Next Story