5-ம் ஆண்டு விழா மகாசபை கூட்டம்
திருப்பூர் தெற்கு மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா மகாசபை கூட்டம், ரத்ததான முகாம் திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோடு அருகே உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பயனீர் மோட்டார்ஸ் உாிமையாளர் கே.பி.ஷாஜன், அம்பாள் ஆட்டோ ஸ்போ்ஸ் உரிமையாளர் தேவராஜ், சோலார் பேட்டரி உரிமையாளர் சொக்கலிங்கம், கணபதி ஆட்டோமொபைல் உரிமையாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி சங்கத்தின் 5-ம் ஆண்டு விழாவை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து ரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர். சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நினைவுப்பரிசுகளை வழங்கினர். சங்க பொதுச்செயலாளர் மணிகண்டன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கிருஷ்ணமூா்த்தி வரவு-செலவு கணக்குகளை வாசித்தார். தொடர்ந்து மகாசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பூர் மாநகரில் மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்களுக்கு தொழில் வளாகம் அமைத்து தர வேண்டும், எம்.எஸ்.எம்.ஐ. உதயம் பதிவு பெற்ற சங்க உறுப்பினர்களை ஒருங்கிணைத்து அரசு மானியத்துடன் கூட்டு சிறுதொழில்கூடம் அமைத்திடவும், தொழிலை விரிவுபடுத்த அரசு மானியத்துடன் வங்கிக்கடன் பெறுவதற்கும் சங்கத்தின் சார்பில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், சிட்டோ கிளை மேலாளர், மற்றும் வங்கி மேலாளர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர்கள் கந்தபெருமாள், கணேசன், துணைச்செயலாளா்கள் சசிதரன், செந்தில்குமார், துணை பொருளாளர் ச.சரவணன், ஆலோசகர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.