தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை


தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
x

தஞ்சையில் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(வயது 23). தச்சு தொழிலாளியான இவர் தனது மனைவி மெர்சி செல்சியாவுடன் தஞ்சை ராஜப்பா நகர் பகுதியில் வசித்து வந்தார். சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் மணிகண்டன் மனைவி மெர்சி செல்சியா புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story