சுசீந்திரம் அருகே மூதாட்டியை தாக்கிய தொழிலாளி கைது

சுசீந்திரம் அருகே மூதாட்டியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மேலகிருஷ்ணன்புதூர்:
சுசீந்திரம் அருகே மூதாட்டியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மூதாட்டி மீது தாக்குதல்
சுசீந்திரம் அருகே உள்ள அக்கரை குத்துக்கல் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தம் (வயது 87). இவர் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் ஆனந்தம் வீட்டில் இருந்த போது ஆபாச வார்த்தைகளால் தனக்கு தானே பேசியதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த அசோக்நாத் (42) என்ற தொழிலாளி என்பவர் நடந்து சென்றார்.
இந்தநிலையில் தன்னைத் தான் அவர் திட்டுகிறார் என நினைத்த அசோக்நாத் வீடு புகுந்து ஆனந்தத்தை தாக்கி செங்கலால் தலையில் அடித்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ஆனந்தம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் அசோக்நாத் மீது கொலை முயற்சி உள்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.