மனைவியை தாக்கிய தொழிலாளி கைது

கோட்டூர் அருகே மனைவியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
கோட்டூர்
கோட்டூர் அருகே உள்ள பெத்தநாயக்கனூரை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 32). இவர் கம்பி வேலி போடும் வேலைக்கு சென்று வருகிறார். இவரது மனைவி பரமேஸ்வரி (27). இந்த நிலையில் ஜனார்த்தனன் தினமும் மதுகுடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் முன் நின்று கொண்டு பரமேஸ்வரியை, ஜனார்த்தனன் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த குத்துவிளக்கை எடுத்து பரமேஸ்வரியை தாக்கியதாக தெரிகிறது. அப்போது தடுக்க வந்த அதே பகுதியை சேர்ந்த தங்கவேல், அருண்மொழி ஆகியோரையும் குத்துவிளக்கால் தாக்கியுள்ளார். இதில் அவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜனார்த்தனனை கைது செய்தனர்.






