1½ வயது குழந்தைக்கு பீடியால் சூடு வைத்த தொழிலாளி கைது


1½ வயது குழந்தைக்கு பீடியால் சூடு வைத்த  தொழிலாளி கைது
x

ஒரத்தநாடு அருகே 1½ வயது குழந்தைக்கு பீடியால் சூடு வைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

திருவாரூர்

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே 1½ வயது குழந்தைக்கு பீடியால் சூடு வைத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

இரட்டை குழந்தைகள்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள குலமங்கலம் வடக்கு தெரு ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ். இவருடைய மனைவி மேகலா (வயது23). இவர்களுக்கு 1½ வயதில் ஹர்ஷன், ஹரணிகா ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். பிரகாஷ் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் மேகலா குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வருகிறார்.

கைது

மேகலாவின் எதிர் வீட்டில் வடிவேல் (36) ( தொழிலாளி) என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை ஹரணிகாவின் காலில் வடிவேல் பீடியால் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மேகலா ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story