பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது


பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது
x

மணல்மேடு அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்

மயிலாடுதுறை

மணல்மேடு:

மணல்மேடு அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சில்மிஷம்

மணல்மேட்டை அடுத்த கிடாத்தலைமேடு வடக்குத் தெருவை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் சம்பவத்தன்று மாலையில் கிடாத்தலைமேடு அருகே சிறுநாங்கூர் பகுதியில் உள்ள வயலில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த அதே ஊர் மாதாகோவில் பகுதியை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளியான மாசிலாமணி (55) என்பவர் தனியாக புல் அறுத்து கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், மாசிலாமணியை திட்டியுள்ளார்.

அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரம் அடைந்த மாசிலாமணி, அந்த பெண்ணின் ஆடைகளை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து அவரிடம் இருந்த அரிவாளை பிடுங்கி தலையில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார்.இதில் காயம் அடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது

இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசிலாமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Related Tags :
Next Story