பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளி கைது
ஆலங்குடி அருகே பெண்ணை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
குடும்பத்தகராறு
ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 55), கூலி தொழிலாளி. இவரது மனைவி மாணிக்கம். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்தநிலையில் அவர்கள் 2 பேருக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து மனைவி பெரியநாயகி (50) கருப்பையாவை தட்டி கேட்டு உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த கருப்பையா வீட்டில் இருந்த அரிவாளால் பெரியநாயகியின் கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
கைது
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.
பின்னர் அவர் ஆலங்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.