இளம் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த தொழிலாளி கைது


இளம் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த தொழிலாளி கைது
x

முகநூல் மூலம் அறிமுகமாகி இளம் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த தொழிலாளி கைது செயயப்பட்டார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு தாலுகா, அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டது. இந்தநிலையில் அவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அடுத்த ஏந்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற தொழிலாளிக்கும் முகநூல் மூலம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு வந்த வேல்முருகன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது ஆசைக்கு உடன்பட மறுத்தால் விஷம் குடித்து விடுவதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இதில் அவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் வேல்முருகனிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டதற்கு திருமணம் செய்ய மறுத்ததாகவும், இது குறித்து மேலும் பேசினால் தன்னையும், தன்னுடைய சகோதரரையும் கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ராணிப்பேட்டை மகளிர் போலீசில் இளம்பெண் புகார் செய்தார்.

அதன்பேரில் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story