மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கூலி தொழிலாளி கைது


மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கூலி தொழிலாளி கைது
x

திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மேற்பார்வையில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது மோட்டார் சைக்கிள்கள் திருட்டு நடைபெற்ற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்தும், செல்போன் அழைப்புகளை ஆராய்ந்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கூலி தொழிலாளி கைது

அதன் மூலம் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்ட கீழ்பென்னாத்தூர் தாலுகா வேளானந்தல் புதூர் பாடசாலை தெருவை சேர்ந்த விஜி (வயது 36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கூலி வேலை செய்வதால் போதுமான பணம் இல்லாததால் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் தனியாக நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்றதாக ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவரிடம் இருந்து பல்வேறு இடங்களில் திருட்டு போன 27 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story