பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது


பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது
x

பிளஸ்-2 மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 19), கூலி தொழிலாளி. இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய பிரவீன் அவரை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் காட்டுமன்னார்குடியில் இருந்தவர்களை அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் அந்த மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் பிரவீனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story