பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது
தேனி அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
தேனி
தேனி அருகே உள்ள வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மாரிச்சாமி மகன் கருப்பசாமி (வயது 25). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தார். அந்த வீட்டில் 20 வயது இளம்பெண் ஒரு அறையில் தூங்கிக் கொண்டு இருந்தார். அங்கு சென்ற கருப்பசாமி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். உடனே அவர் சத்தம் போட்டதால் அவருடைய பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தில் வசித்த உறவினர்கள் அங்கு ஓடி வந்தனர். அப்போது கருப்பசாமி மறைத்து வைத்து இருந்த கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story